பாஜகவில் இருந்து விலகி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அந்த வகையில், நடிகை கவுதமியை கொள்கை பரப்பு துணை செயலாளராகவும். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா து.பெரியசாமி , சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரை இபிஎஸ் நியமித்துள்ளார்.