தர்மபுரி: தர்மபுரியில் முதல்வர் மருந்தகம் திறப்பு

67பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைதொடர்ந்து,
குமாரசாமிபேட்டை முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் குத்து விளக்கேற்றி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, முதல்வர் மருந்தகத்தின் மூலம் 5 பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி