கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தனார் வேலை செய்து வந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் உயிரிழந்த நிலையில், மனைவி, மகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது விபத்து குறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.