வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், சூர்யா பேட்டை பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மனிஷா (24) என்ற இளம்பெண் சம்பத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களாக சம்பத்தும் அவரது உறவினர்களும் வரதட்சணை கேட்டு மனிஷாவை தொந்தரவு செய்து வந்துள்ளனர். குடும்பத்தினரின் தொல்லை தாங்க முடியாமல் மனிஷா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.