ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டியை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்தி பணம் பறிக்க தீவிரவாத அமைப்பு முயற்சி செய்துவருவதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவற்றில் தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP), ISIS மற்றும் பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட பல்வேறு அமைப்புகள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.