தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணியின் பேச்சிற்கு, மயிலாடுதுறை எம்பி சுதா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், "சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் நிற்கலாம். சென்னையில் வசித்து இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் இங்கு நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா?" என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.