சேலம் மாவட்டம் மேச்சேரி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் என்பவர், நேற்று மாலை விக்னேஷ் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து மேச்சேரி நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.