தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உங்காரண அள்ளி ஊராட்சி எட்டிமரத்தப்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி விழா தலைமையேற்று விழா பேருரை ஆற்றினார். பொதுக் கூட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் என் ஜி எஸ் சிவப்பிரகாசம், நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் அசோகன், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.