சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ரவி என்பவர் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா, பெரியசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் கைதாகியுள்ளனர். அவர்களில் கோவிந்தராஜ் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள தனது நிலத்தில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த நிலையில் போலீசாரிடம் சிக்கினார்.