பாப்பிரெட்டிபட்டி - Pappireddipatti

அரிசி கடத்தல் - வாகன சோதனையில் மூவர் கைது!!

அரிசி கடத்தல் - வாகன சோதனையில் மூவர் கைது!!

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முந்தைய நாள் இரவு 9:30 மணியளவில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அருகே கும்பாரஹள்ளியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சேலம் சரக டி.எஸ்.பி. விஜயகுமார், கிருஷ்ணகிரி எஸ்.ஐ. பெருமாள், தர்மபுரி குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ. கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் இணைந்து செயல்பட்ட போது அசோக் லைலேண்ட் சரக்கு வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லேஷ் (21), ராஜ்குமார் (39), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி
கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Aug 27, 2024, 13:08 IST/தர்மபுரி
தர்மபுரி

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Aug 27, 2024, 13:08 IST
தருமபுரி மாவட்ட ஏ ஐ டி யு சி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவு படி ஓய்வூதிய மாதம் ரூ. 2000 உடனே வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப்- ஐ காரணம் காட்டி வாரிய பலன்களை மறுக்காமல், வெளிமாநில தொழிலாளர்கள் வருகைக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும். 80 சதவீத வேலைகளை உள்ளூர் தொழிலாளர்க ளுக்கு கட்டாயமாக வழங்க தனி சட்டம் இயற்ற வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவியை ஐம்பதாயிரம் வழங்க வேண்டும். மேலும் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் உடனே பரிசீலனை செய்ய வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டுக் குழு கூட்டத்தினை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.