தர்மபுரி: தோட்டத்திலேயே தர்பூசணி பழங்களை அதிகாரிகள் ஆய்வு

67பார்த்தது
தற்போது தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கி உள்ளது பொதுவாக கோடை காலங்களில் தர்பூசணி பழங்களில் தேவையும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம் தற்போது தர்பூசணி பழங்களில் நிறம் அதிகரிக்க ரசாயன ஊசிகள் செலுத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை எடுத்த, தர்மபுரி உணவு மற்றும் பாதுகாப்பு துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அருகே உள்ள பாசரபட்டியில் தோட்டக்கலைத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஒரு விவசாயின் தோட்டத்தில் தர்ப்பூசணியை ஆய்வு செய்தனர் அப்போது அதில் எந்த வித ரசாயனமும் கலக்கவில்லை முற்றிலும் இயற்கையான நிறம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் ரசாயனம் கலந்த தர்பூசணி விற்பனை செய்யபடுவதாக பரவிய தகவலால் விற்பனை பாதிக்கப்படுவதாகவும், இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி