குறிஞ்சிப்பாடி - Kurinjipadi

குறிஞ்சிப்பாடி அருகே ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் தேதி முதல் நேற்று ஐந்தாம் ஆம் தேதி வரை தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. அடுத்த தமிழ் மாதம் ஐப்பசி 1ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


హైదరాబాద్