கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு விவசாய நிலங்களில் கம்பு பயிரை பயிரிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கம்பு அறுவடை சீசன் என்பதால் அறுவடை செய்யும் பணியில் ஏராளமான விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பு கடந்த வருடத்தை விட இந்த வருடம் கம்பு விளைச்சல் குறைவு என்றும், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.