கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா என கேட்டறிந்து செல்கின்றனர்.