விருத்தாசலம் - கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நடுவே தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஒரு வழி சாலையாக மாற்றி விடப்பட்டது. சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.