குறிஞ்சிப்பாடி அருகே மக்கள் மகிழ்ச்சி

75பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சாலையோரம் உள்ள கால்வாயில் புதர் செடிகள் அதிக அளவில் மண்டி காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் புதர் செடிகள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி