கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சனிக்கிழமை வரை கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.