ஆழங்காத்தான்: விஷம் குடித்து பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த குமராட்சி ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செல்லையன் மனைவி திரிபுரசுந்தரி கடந்த சில நாட்களாக இவர் கடன் பிரச்சினையால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.,22) திரிபுரசுந்தரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திரிபுரசுந்தரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.