கடலூர் மாவட்டத்தில் உள்ள, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் கடந்த ஒரு மாதம் பிறகு இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த மாதம் புரட்டாசி மற்றும் கடந்த வாரம் சங்கடஹர சதுர்த்தி என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.