இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஏழாம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 1,423 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று(செப்.9) மூன்றாவது நாளாக பல்வேறு வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் பெரியக்குப்பம், சாமியார் பேட்டை, தைக்கால் தோணித்துறை நல்லவாடு, சி புதுகுப்பம், கொள்ளிடம் ஆறு, கடலூர் சில்வர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் 1,375 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.