கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் வீராணம் ஏரி முழு கொள்ளளவு அளவிற்கு தண்ணீர் உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனை அப்பகுதியில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.