கடலூர் மாவட்டம் பண்ருட்டி , சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள ஒருவருக்கொருவர் பலகாரங்களை பரிமாறிக் கொண்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.