வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 3 வது முறையாக முழுக் கொள்ளளவை (47. 50 அடி) எட்டியுள்ளது. அதாவது 1, 465 மில்லியன் கன அடி நீா் உள்ளது. எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாயிலாக வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. நேற்று நிலவரப்படி வீராணம் ஏரியிலிருந்து, சென்னைக்கு வினாடிக்கு 65 கன அடியும், பாசனத்துக்கு 150 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்படப்படுகிறது. கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.