காட்டுமன்னார்கோவில்: அமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டம்

73பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம். எல். ஏவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தந்தையுமான எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி 35 ஆம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஓமாம்புலியூர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து காட்டுமன்னார்கோவிலில் வரையில் அமைதி ஊர்வலம் நடந்தது. இரவு காட்டுமன்னார்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்றார். எம். ஆர். கே. , அறக்கட்டளைகள் தாளாளர் தெய்வசிகாமணி, தி. மு. க. , மாவட்ட பொருளாளர் கதிரவன், அவைத் தலைவர் கருணாநிதி, முட்டம் ஜெய பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி