பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சினால் என்ன ஆகும்?
பாம்புக் கடிக்கு ஆளாவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். பாம்பு கடித்த பகுதியை துணியால் இறுக்கமாகக் கட்டக்கூடாது. இதன் விளைவாக ரத்த ஓட்டம் முற்றிலும் துண்டிக்கப்படும். பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து, கடித்து உறிஞ்சுவது போன்ற செயல்களை செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், அத்தகைய செயல்களை செய்வோரின் உடலிலும் நஞ்சு ஏறி ஆபத்தை விளைவிக்கலாம்.