நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

84பார்த்தது
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கார் மூலம் பகலில் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம், சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன், அவரை எழும்பூர் 5-வது கோர்ட்டு விடுமுறை மாஜிஸ்திரேட்டு ரகுபதி ராஜா முன்னிலையில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

அப்போது, அவரை வருகிற 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் டி. ஆர். பிரபாகரன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி