விருகம்பாக்கம் - Virugampakkam

திமுக-விசிக உறவில் எந்த விரிசலும் இல்லை- திருமாவளவன்

திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று(செப்.16) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம். மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். மற்றபடி திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம் என அவர் கூறினார்.

வீடியோஸ்


சென்னை
Sep 17, 2024, 05:09 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

இன்று திமுக பவள, முப்பெரும் விழா: ஏற்பாடுகள் தீவிரம்

Sep 17, 2024, 05:09 IST
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார். செப். 15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப். 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப். 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாகும். ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார். செப். 15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப். 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப். 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாகும். ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில், தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார்.