ஆயிரம் விளக்கு - Thousand lights

நான் பேசியது காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்; திருமா

நான் பேசியது காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்; திருமா

தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என தெரியவில்லை என்பன உள்ளிட்ட விமர்சனங்களை திருமாவளவனுக்கு எதிராக தமிழிசை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநாட்டில் திருமாவளவன் பேசும்போது, நேரமின்மை காரணமாக காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாததால் காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது நாள்தோறும் மது அருந்துவேன் என்று தமிழிசை சொல்வதாக தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரை போல் எனக்கும் அந்த பழக்கம் கிடையாது என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், என்ன குற்றவுணர்வு? மது ஒழிப்புக்காக போராடிய காந்தி பிறந்தநாளில் மாநாடு நடத்தினோம். அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர். மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் காத்திருக்க முடியவில்லை. எனக்கு ஏதோ ஈடுபாடு இருப்பதாக மறைமுகமாக சொல்ல வந்தார். எனவே, உங்களைப் போல் தான் நானும் என்று சொன்னேன். இது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை