ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம்.. விஜய்

சென்னை: தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம்.. விஜய்

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம் என தமிழ்நாடு தினத்துக்கு தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Nov 01, 2024, 13:11 IST/தியாகராய நகர்
தியாகராய நகர்

விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை

Nov 01, 2024, 13:11 IST
தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் கட்சி அமைய வேண்டும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும் என அவர் கூறினார்.