அரசு மருத்துவமனையில் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

76பார்த்தது
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ரபீக் அஹமத். இவரது மனைவி ஆயிஷா ஜம்ரூத்(50). இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

கணவர் ரபீக் அஹமத் கடந்த ஒரு வருடமாக உடல் நிலை குறைவால் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் ஆயிஷா ஜம்ரூத்(50) கடந்த 5 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்த நிலையில் காய்ச்சல் குறையாததால் கடந்த 7 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலன்யின்றி உயிரிழ்ந்தார்.

இதனை தொடர்ந்து இறந்த ஆயிஷா ஜம்ரூத் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் மற்றும் அரசு தலைமை மருத்துவர் சிவசுப்பிரமணி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வர்த்தை நடத்தினர். மேலும் இறந்த பெண்மணிக்கு ஹார்அட்டாக் ஏற்பாடு
உயிரிழ்ந்துள்ளார். இருப்பினும்
உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதன் பேரில் சடலத்தை கைப்பற்றி கலைந்து சென்றனர்.

இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி