திருவள்ளூர்: சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாநில தழுவிய மாவட்ட தலைநகரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்:

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாநில தழுவிய மாவட்ட தலைநகரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஹேமலதா, செஞ்சிகான், மாவட்ட இணை செயலாளர்கள் முனுசாமி, மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பூபாலன், இளங்கோவன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மணி விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் திவ்யா, வெண்ணிலா, ஜெயராமன், நாயகம், சங்கரன், நாராயணன், மாநில துணை தலைவர் காந்திமதிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில சுந்தரம்மாள், மாவட்ட பொருளாளர் வசந்தா ஆகியோர் நன்றி கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி