தூத்துக்குடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், “அதானி விவகாரத்தில் மத்திய அரசும், பாஜகவும் விளக்கம் கொடுத்துவிட்டார்கள். பிரதமர் மோடியை பொறுத்தவரை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை தமிழ்நாடு போன்ற 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆளும் அரசுகள் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார். லஞ்சப் புகார் தொடர்பாக அதானி மீது அமெரிககா குற்றம் சாட்டிய நிலையில், அதானி பணத்தை பாஜக பயன்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.