ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். 176 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்தியாவின் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்களின் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்தியா தற்போது 224/1 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது.