திருவள்ளூர்: வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
ஓசூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கூட்டமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ராம்குமார், ஆதாம், விஜயபாபு, ஜெயசுந்தர், லேமுவேல், முரளி, சுனில், சுந்தரேசன் ஆகியவர்கள் தலைமையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்களுக்கு என தனிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டும் தமிழக அரசு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

எனவே வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கென பாதுகாப்புச் சட்டத்தை ஒரு வாரகாலத்திற்குள் முதல்வர் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி