திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செயல்படும் அட்டை பெட்டி தயாரிக்கும் ஸ்டார் பாக்சஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் போளிவாக்கம்
உப்பர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபர் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்திருந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேரம்பாக்கம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொழிலாளியின் பொருளாதாரம் நம்பியே வாழ்வாதாரம் இருந்து வந்த அவருடைய குடும்பம் அவர் இறப்புக்கு பிறகு மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளது.
இந்நிலையில் அத்தகைய குடும்பத்திற்கு
அவருக்கு சேர வேண்டிய பணப்பயன்கள் கருணைத்தொகை கல்விச் செலவுத் தொகை என 5லட்சத்திற்கான காசோலையை நிர்வாகம் சார்பில் அவர் குடும்பத்தினரிடம் இன்று வழங்கப்பட்டது.
தனது கணவர் உயிரிழப்புக்கு பிறகு அவருக்கு நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் அளித்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்
பொருளாதார இன்றி தவித்து வரும் தனக்கும் தன் பிள்ளைகளை முன்னேற்றுவதற்கும் தொழிற்சாலையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என உயிரிழந்த தொழிலாளியின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த ரமேஷின் மனைவிக்கு தொழிற்சாலையில் வேலை வழங்குவது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது