திருவள்ளூர், காக்களுர் பகுதியை சேர்ந்த ராஜா கடந்த பிப்பிரவரி திருவள்ளூர் வடக்கு ராஜவீதி தெருவில் உள்ள அலிஸ் சூப்பர் மார்க்கெட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட கொய்யாப்பழம் ஜூஸ் வாங்கியுள்ளார்.
அந்த ஜூஸ் பாட்டில் எம். ஆர். பி விலை ₹125 இருந்த நிலையில் ஆனால் அவரிடம் ₹143 என 18 கூடுதலாக வசூலித்துள்ளனர்.
இதனால் மார்க்கெட் மேலாளரிடம் கேட்டதற்கும் முறையான பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எம்ஆர்பி விட கூடுதலாக வசூல் செய்த ₹18 அளித்திட கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார், நோட்டீஸ் அனுப்பியதற்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் அலிஸ் சூப்பர் மார்க்கெட் அலட்சியமாக இருந்து வந்துள்ளது, பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜூஸ் எம்ஆர்பி விலை விட கூடுதலாக வசூலித்ததற்கான ஜிபே மூலமாக பெற்றதற்கான தொகை விவரம் மற்றும் பாட்டில் எம்ஆர்பி ஜெராக்ஸ் நகல்
வைத்து ₹3. 50 லட்சம் இழப்பீடு கேட்டு அலீஸ் சூப்பர் மார்க்கெட் மீது வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி எம்ஆர்பி விலைப்பட்டியல் விட கூடுதலாக வசூலித்த ₹18 திருப்பி அளித்திடவும் மற்றும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு ₹10000 வழக்கு செலவிற்கு 5000 என மொத்தமாக 15000 இழப்பீடு வழங்கிட சூப்பர் மார்க்கெட்டிற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.