பெரம்பூர் - Perambur

அதிமுகவுக்கு விசிக அழைப்பு

அதிமுகவுக்கு விசிக அழைப்பு

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வரும்படி அதிமுகவுக்கு விசிக திடீர் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் இன்று பேட்டியளித்த திருமாவளவன், இந்த அழைப்பை விடுத்தார். மேலும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த சக்திகளோடும் விசிக கைகோர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கும் நிலையில், திடீரென அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. எனினும், பல்வேறு விவகாரங்களில் திமுக மீது விசிக அதிருப்தியில் இருப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. பதிலளிக்காமல் மவுனம் சாதித்த விசிக, மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்குமோ என அரசியல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்

வீடியோஸ்


சென்னை