கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது

58பார்த்தது
கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது
தமிழக கோயிலில் இருந்து திருடிவிற்கப்பட்ட, ரூ. 5 கோடி மதிப்புள்ளகிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் சோழர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட, கலியுக கல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின்மேல் நடனமாடும் நிலையில் உள்ளது) உலோக சிலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரிடம் இருந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச் போர்டுஎன்பவர் ரூ. 5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். மேலும், அவர் 2020-ம்ஆண்டு இறந்துள்ளார் என சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இந்த சிலையை மீட்கும்முயற்சியில் தமிழக சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு ஐஜி தினகரன் தலைமையிலான போலீஸார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டனர்.

இதையடுத்து, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிலையை டிஜிபி சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அப்போது அவர், இந்த சிலை மீட்பு முயற்சியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுஐ. ஜி தினகரன், எஸ். பி. சிவக்குமார், புலன் விசாரணை அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீஸாரை வெகுவாகப் பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி