விநாயகர் சதுர்த்தி பண்டிகை: மின்சார ரயில் சேவை மாற்றம்

55பார்த்தது
விநாயகர் சதுர்த்தி பண்டிகை: மின்சார ரயில் சேவை மாற்றம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (7ஆம்தேதி) பொது விடுமுறை என்பதால் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல் - சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி