சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

துணை முதல்வர் பதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகதான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது அவரின் தனிப்பட்ட முடிவு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். 'இன்று (செப்., 18) 11 மணிக்கு உங்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே? ' என்று செய்தியாளர் கேட்டதும் ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த உதயநிதி, "நான் இன்னைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்துட்டேன். அறிவாலயமே போகலை. தொண்டர்கள் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் அந்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். எந்த முடிவானாலும் முதலமைச்சர் எடுப்பார். அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு எனப் பதிலளித்தார்.

வீடியோஸ்


சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு
Sep 18, 2024, 14:09 IST/எழும்பூர்
எழும்பூர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

Sep 18, 2024, 14:09 IST
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி, தலைமைச் செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதல்வரின் தனிச் செயலரை இன்று (செப்.,18) சந்தித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ம் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி தலைமை செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதலமைச்சரின் தனி செயலரை சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் காவல்துறையின் விசாரனையில் தங்கள் கட்சிக்கு திருப்தியில்லை என தெரிவித்தார்.