சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து நெய் வாங்க கூடாது: ஹெச். ராஜா

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் இன்று(செப்.22) பேசினார். அப்போது அவர், திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்துகிற நெய்யில் மிருகக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நிறுவனம் தான் பழனிக்கும் நெய் சப்ளை செய்கிறது. எனவே, இந்த குற்றச்சாட்டில் இருந்து அந்நிறுவனம் விடுதலையாகும் வரை தமிழகத்தில் எந்த கோயிலுக்கும் அந்நிறுவனத்தில் இருந்து நெய் வாங்க கூடாது. மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் பழனி கோயிலின் தக்காராக உள்ளார். எனவே, அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதை கேட்டால் பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. டாஸ்மாக் மற்றும் இந்து கோயில்களின் வருமானத்தால் தான் திமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. 2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இதனை மீட்க இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்திருக்கிறது? இந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கும், அழிப்பதற்கும் ஒரு அரசாங்கமா? என்று கூறினார்.

வீடியோஸ்


சென்னை
ஆளுநர் தலைமையில் 24-ல் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Sep 22, 2024, 14:09 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

ஆளுநர் தலைமையில் 24-ல் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Sep 22, 2024, 14:09 IST
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நேற்று(செப்.21) வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை அரங்கில் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர்ஆர். என். ரவி தலைமை வகிக்கிறார். அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றுகிறார். இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் என கூறப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒருங்கிணைப்புக் குழுதான், பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா துணைவேந்தர் இல்லாமல் நடைபெறுகிறது. 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.