சட்டவிரோத செம்மண் திருட்டு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

68பார்த்தது
சட்டவிரோத செம்மண் திருட்டு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கோவை மாவட்ட மலைக்கிராமங்களில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும், என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை போன்ற கிராமங்களில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் நேற்று (செப்.21) விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள வீடியோவில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதை அனுமதித்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும். செம்மண் எடுக்கப்படுவதால் உருவாகும் குழிகளில் யானைகள் போன்ற விலங்குகள் விழும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுக்க தடை விதித்தும், இப்பகுதிகளில் மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி