அண்ணா நகர் - Anna nagar

பிரபல ரவுடி என்கவுண்டர்: போலீஸ் விளக்கம்

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பிரவேஷ் குமார், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. இதனை கண்காணித்த போலீசார் அப்போது கஞ்சாவுடன் தப்பி சென்றவர்களை தான் போலீசார் விரட்டி சென்று சுற்றிவளைத்தனர். அச்சமயத்தில் காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது. இந்த சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் படுகாயமடைந்த நபரை சோதிக்கும்போது உயிர் இருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகே அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. இவர் மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காக்கா தோப்பு பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை
நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஆணை
Sep 19, 2024, 00:09 IST/துறைமுகம்
துறைமுகம்

நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஆணை

Sep 19, 2024, 00:09 IST
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கி்ல் நவாஸ்கனி எம்பி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதையடுத்து நவாஸ்கனி பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும், வேட்புமனுவில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், எனவே நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி. வி. கார்த்திகேயன் முன்பாக நேற்று(செப்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் நவ. 5-க்கு தள்ளி வைத்துள்ளார்.