ஆவடி - Aavadi

மணலியில் பல்லாங்குழியான சாலைகளால் தொடரும் விபத்து அபாயம்

மணலியில் பல்லாங்குழியான சாலைகளால் தொடரும் விபத்து அபாயம்

மணலியில், 1. 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகளில், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்க, ஆங்காங்கே பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடகிழக்கு பருவமழை காரணமாக, புதிதாக பள்ளம் தோண்டக்கூடாது எனவும், தவிர பணிகள் முடிந்த இடங்களில், பள்ளங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பணிகள் முடிந்த இடங்களில், அவசர அவசரமாக பள்ளங்களை மூடிய நிலையில், அவற்றை சமன் செய்யாமல் விட்டு விட்டனர். இதனால், பல தெருக்களில் பள்ளம் சமனற்ற நிலையில், மேடும் பள்ளமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு, பல்லாங்குழி சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, பள்ளம் மேடு தெரியாமல், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமுறுகின்றனர். எனவே, அதிகாரிகள் கவனித்து, பணிகள் முடிந்த சாலைகளை உடனடியாக சமன் செய்ய வேண்டும். இல்லாவிடில், பல்லாங்குழி சாலைகளால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా