தீபாவளி எதிரொலி: அதிகரித்த பூக்களின் விலை
தீபாவளி பண்டிகையை ஒட்டி பூசந்தைகளில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.250க்கும், வாடாமல்லி கிலோ ரூ.20க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது. விலை அதிகமாக இருந்தாலும் பூக்களின் வியாபாரம் ஜோராக நடக்கிறது.