திருச்சி: மகளிர்க்கு இலவச வைப்புத் தொகை திட்ட துவக்க விழா
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட மகளிர்க்கு இலவச அஞ்சல சேமிப்பு வைப்புத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் ஆயிரம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அன்றாடம் தங்களின் வரவுகளைச் சேமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மகளிருக்கு சேமிப்பு வைப்புத் தொகை அட்டையை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.