மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. CBSE 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு நிலை கணிதத்தை (தரநிலை மற்றும் அடிப்படை) அறிமுகப்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கணக்கு படத்தை இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்தும் முறை 2019-20 கல்வி அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.