நாடாளுமன்றத்தில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் இன்று பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் இந்தி கற்பதே குற்றம் எனக் கருதும் சூழல் நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அப்படிப்பட்ட சூழல் காரணமாகவே தன்னால் இப்போது வரை சரியாக இந்தி பேச முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு திமுக உள்ளிட்ட தமிழக MPக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.