ஹிந்துஸ்தான் பவர் நிறுவனம் மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கொண்டுவந்துள்ளது. இதன் பின்புறம் இரண்டு சக்கரங்கள் இருப்பதால் அதை பேலன்ஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 10 இன்ச் முதல் அலாய் வீல்கள் உள்ளன. 190மிமீ டிஸ்க் பிரேக்கும் இருக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 60V 32AH லீட்-ஆசிட் பேட்டரி உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிமீ வரை செல்லும். இதன் விலை ரூ.1.20 லட்சம் ஆகும்.