மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை இரவு வந்த விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் தண்ணீர் குழாய்க்குள் (டேப்) 180 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 13.69 லட்சமாகும். தங்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.